ஆசிரியர் ஒரு செயல் ஆராய்ச்சியாளர்
முன்னுரை:
‘‘ எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் ”-என வள்ளுவர்
வகுத்த அழியாத கருத்தை ஆழ்மனதில் புகுத்தி அகிலத்தை வலம் வர ஒவ்வொரு மாணவனையும் வழிகாட்டும்
ஆசிரியர் தன் பணியில் (கற்பித்தல்) பன்முகத்திறன் பெற்றவராய் விளங்கினாலும்,ஒவ்வொரு
மாணவனையும் பட்டைத் தீட்டி அவரவர் வாழ்வில் பளபளக்கும் வைரங்களாக மாற்ற வேண்டிய சிறந்த
பொறுப்பை ஏற்கிறார்.
எனவே தலைசிறந்த
பணியைச் சிறப்பாக முடிக்க ஒவ்வொரு ஆசிரியரும்,ஒவ்வொரு நொடியும் ஒரு ஆராய்ச்சியாளராக
செயல்பட்டு தனது ஆராய்ச்சியில் வெற்றி கொள்கிறார். ஓர் ஆசிரியர் எவ்வெவ் வகைகளில் தனது
ஆராய்ச்சிப் பணியை பரிசீலனை செய்து, பன்முக வெற்றியை சுவீகாரம் எடுக்கிறார், என்பதை
இந்தப் பகுதியில் தரம் பிரிப்போம்…
கற்பித்தல் பணியில் ஆசிரியரின் ஆராய்ச்சி:
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது-என்ற கூற்றை
அனைவரும் அறிவோம்.நம் திண்ணைப் பள்ளிகளும் இன்று நடைமுறையில் இல்லை.நம் சமுதாயம் நடந்து
வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் வியந்து போவோம்.வெகு காலம் கடந்து இன்னும் களைப்படையாமல்
நடக்கிறோம்.
இன்றைய சூழலில்
கல்வியின் அருமை பெருமைகள் நமக்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.கல்வியின் மேம்பாடும்
கற்றுக் கொள்ளும் ஆர்வமும் சம அளவில் உயர்ந்து நிற்கும் தராசுத் தட்டுகள் போலக் காணப்படும் இந்த நிலையில்,உயர்ந்த செறிவுமிக்க கல்வியை மாணவச்
செல்வங்களுக்குக் கற்றுத்தர வேண்டுமெனில், ஆசிரியர்கள் மிக்க கற்பித்தல் திறன் உடையவராய்
இருப்பது சாலச் சிறந்தது.இன்று ஆசிரியர்கள் மிகநல்ல கற்றல் அனுபவங்களைத் தம்மை நம்பியிருக்கும்
மாணவருக்கு வழங்க, முக்கியப் பொறுப்பேற்கும் நிலையில் இருப்பதால் எந்தப் பாடங்களைக்
கற்பிக்க முனைந்தாலும் விழிப்போடு ஆராய்ச்சிக்கண் கொண்டு செயல்படுகிறார்கள்.
பாடப் பொருளில் ஆசிரியரின் ஆராய்ச்சிப் பணி :
கற்றல் அனுபவங்கள் சிறப்பாக இருக்க வேண்டுமானால், சிறந்த பாடப்
பொருள் அவசியம்.மாணவர்க்கு அளிக்கப்படும் பாடப் பொருள் செறிவுடையதாகவும்,எளியனவாகவும்,மாணவரின்
வயதிற்கும் அறிவு நிலைக்கும் பொருத்தமுடையதாகவும்,மாணவர்களின் மன நிலைக்கு ஏற்றவாறும்,அவனது
திறனை மேம்பாடு செய்வதாகவும், அவனது ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், அமைய வேண்டும்.
மனதில் நம்பிக்கை
ஒளியூட்டு வதாகவும் அவனது அறிவுப் பசிக்கு தீனி போடுவதாகவும், அவனிடம் ஆராய்ச்சி மனப்பான்மையைத்
தோற்றுவிப்பதாகவும்,எந்த ஒரு சிறு செயலையும் அறிவியல் பார்வையோடு அணுக அவனுக்கு வழிகோலுவதாகவும்,முழு ஆளுமைத் திறனை
அவர்களுக்குள் வளர்க்க உறு துணை யாகவும், கருத்துச் செறிவுடனும்,பொருட் செறிவுடனும்
உண்மையை மட்டுமே உள்ளடக்கி யதாகவும் இருந்து
ஆழமாகவும், அழகாகவும் மாணவர் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்தால், அந்த ஆசிரியரால்
வழங்கப்படும் கற்றல் அனுபவம் மாணவனை விட்டு
எப்போதும் அகலாது.
ஆகவே மேற்கண்ட
எல்லா வகைகளிலும் சிறப்பானதொரு பாடப்பொருளை மாணவனுக்கு வழங்க,தனது ஒவ்வொரு கற்பித்தல்
நிகழ்விலும் ஆசிரியர் அவரது முயற்சிகளை மாணவருக்கு செயல்களாக வழங்க ஆராய்ச்சி செய்து
கொண்டேயிருக்கிறார்.ஒவ்வொரு நாளும் ஆசிரியர் பணி தொடரும்வரை இந்த ஆராய்ச்சியும் தொடருமல்லவா?
அன்றேல் மிக நல்ல பாடப் பொருளைத் தராதவர் ஆகிடுவாரன்றோ! எனவே,இதன் மூலம் ஆசிரியர் மாணவர்க்கு
ஏற்ற பாடப்பொருளைத் தருவதில் செயல் ஆராய்ச்சியாளராக இருக்கிறார் என்பது புலனாகிறது…
பல்வேறு கற்பித்தல் முறைகளைக் கையாளும் ஆராய்ச்சியாளர்:
எவ்வளவு செறிவுள்ள,அற்புதமான,அறிவு
விருத்தி செய்யும் பாடப் பொருளாக இருந்தாலும், ஆசிரியர் கற்பித்தல் நிகழ்வுகளை சரியான முறையில் அளிக்காவிடில்
அங்கே கற்றல் அனுபவம் சிறந்த முறையில் கிடைக்காது அல்லவா?ஆகவே தன்னிடம் பயிலும் அத்துனைக்
குழந்தைகளும் முழுமையாகக் கற்றல் அனுபவங்களைப் பெறுவதற்கு,வகுப்பறையில்,கற்பித்தல்
நிகழ்வில் எண்ணிலடங்கா கற்பித்தல்-முறைகளைக் கையாண்டு வெற்றி கொள்ளும் ஆராய்ச்சிப்
பணியில் ஆசிரியர் ஈடுபடுகிறார்.
ஆசிரியர் -மாணவர் நல்லுறவில் ஆசிரியரின் செயலாராய்ச்சிப்பணி
பிரதானமான கற்றல் பொருள் , பிரம்மிப்பூட்டும் கற்பித்தல் முறைகள் மட்டும் போதுமா ? ஆசிரியரின் ஆராய்ச்சி தொடர்கிறது. உடன் பயணியுங்கள்.கற்றல் அனுபவங்களை பசுமரத்தாணி போல் பதிவிக்க மூளைப்பதிவுகள் மட்டும் போதுவதில்லை.ஆசிரியரின் மனப் பதிவையும் மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள் .ஆசிரியர்கள் எப்போதும் இயல்பாக,இறுக்கமில்லாமல்,இனிய முகத்துடன் ,மாணவரின் பிஞ்சு மனதை கொள்ளை கொள்ளும் நோக்குடன் மகிழ்வு சூழலில் மேற்கண்ட பாடப் பொருளை நல்ல சூழல் வகுத்து வழங்கினால் மாணவரின் மூளைப் பதிவுகள் சற்றுக் கூடுதலாகவே பதிவித்துக் கொள்கின்றன . ஆகவே, ஆசிரியர்கள் எந்நாளும்,மாணவர்களை ஆரோக்கியமான நல்லுறவுடன் எதிர்கொண்டு கற்றல் அனுபவங்களை வழங்கும் களத்தில் செயல்பாடுகளை நிகழ்த்தி வெற்றிபெரும் செயலாராய்ச்சியாளராகவேத் திகழ்கின்றனர் என்பது திண்ணம்....
கற்றல் -கற்பித்தல் உபகரணங்களில் ஆசிரியரின் செயலாராய்ச்சிப்பணி
மிகச் செறிவானப் பாடப்பொருள் ,தெளிவான தேர்ந்தெடுத்த கற்பித்தல் முறை,ஆரோக்கியமான ஆசிரிய-மாணவர் நல்லுறவு இவை மட்டுமா?...ஆசிரியர் செயலாராய்ச்சியாளராகப் பணிபுரியும் எஞ்சிய சிலவற்றை இங்கேக் காணலாம்.மாணவர் அறிவுத் திறன் தூண்டப்பட, மாணவர் சிந்தனை வலுப்பெற மேற்கண்ட இவை அனைத்துடன் மாணவரது காட்சிக்குப் புலப்படும் சில உண்மைப் பொருட்களும், மாணவரது கற்பனைக்கு வழிகாட்டும் படக் காட்சிப் பொருட்களும், விளக்கப் படங்களும்,பல்வேறு திரட்டல் பொக்கிஷங்களும்,பட விளக்கப் படங்களும்,கைவினைப்பொருட்களும்,நூலகஅறிவுப்பெட்டகங்களும் ,அறிவியல் ஆராய்ச்சி செய்யும் ஆய்வுக்கூடமும்,புவியியலைப் புரட்டிப் போடும் வரலாற்று வரைபடங்களும் ,வரலாறு படைக்கும் நிகழ்வுகளும் சான்றுகளும் ,இன்றைய சூழலில் internet லிருந்து எடுக்கப்பட்ட செய்திப்படங்களும் ,அரிய செயல்திட்டங்களும் இறுதியாக பாடப் புத்தகமும் அடங்கிய கற்றல்-கற்பித்தலை ...................வலுவூட்டும் உபகரணங்களைக் கையாள்வதிலும் ஆசிரியர்கள் முற்பட்டு ,வெற்றி விளைவு காணும் செயல் ஆராய்ச்சியாளரே எனில் மிகையாகாது.
எந்தப் பாடத்திற்கு எவ்விதமான துணைக்கருவிகளைப் பயன்படுத்தினால் எந்தளவிற்கு கற்றல் அனுபவங்களை மாணவர் அடைகின்றனர் என்பதற்கு,தங்களது சரியான செயல்பாடுகளால் ஆய்வு செய்யும் மிகப் பெரிய பணியை மேற்கொண்டு கற்பித்தல் களங்களில் பரவ விடும் ஆசிரியர்கள் மிகச் சரியான சாதனங்களைத் தேர்ந்தெடுத்து செயலாராய்ச்சியாளராக மிளிர்கின்றனர்.
மாணவர் அடைவு-மதிப்பீட்டில் ஆசிரியரின் செயலாராய்ச்சிப்பணி :
கற்றல் நோக்கங்கள் எதிர்பார்த்த விளைவுகளை மாணவர்களிடம் ஏற்படுத்தியுள்ளதா?என்பதைச் சோதிக்க எத்தனை எத்தனை யுக்திகளை ஆசிரியர் செயல்படுத்தி ஆய்வு செய்கின்றனர்?எழுத்துத்தேர்வு, வாய்மொழித்தேர்வு,திறனறிவுத் தேர்வு என மாணவர் அடைவுகளை சோதிக்கப் பயன்படுத்தும் அடைவுச் சோதனைகள் பல்வேறு....எந்த நிலையில் உள்ள மாணவனும் ,தனது திறனுக்கு ஏற்ப கற்றல் அனுபவங்களைப் பெற்றவனாவான்.எந்த மாணவரும் மற்ற மாணவருக்கு சளைத்தவரில்லை .ஆகையால் ஒவ்வொருவரையும் அவரவர் பெற்றுள்ள கற்றல் அனுபவங்களை வெளிக் கொண்டுவர எத்தனையோ அடைவுச் சோதனைகளைச் செயல்படுத்தி தனது கற்பித்தலின் பங்கையும் உறுதி செய்து மாணவர் கற்றல் அளவையும் சீர்தூக்கிப் பார்க்கும் ஆசிரியர் ஒரு சிறந்த செயல் ஆராய்ச்சியாளரே ......
குறையறிச் சோதனையில் செயலாராய்ச்சி நிகழ்த்தும் ஆசிரியர் :
`
எந்தப் பாடப்
பொருளை எந்தக் கற்பித்தல் முறையைப் பயன்படுத்தி வழங்கலாம் என ஒவ்வொரு ஆசிரியருமே சிந்தித்து,
கவனமுடன் வகுப்பறையில் அதைப் பயன்படுத்தி,சரியான, ஏற்ற கற்பித்தல் முறையைத் தேர்ந்தெடுத்து
கற்பித்தலில் வெற்றி காண்கிறார். எத்தனையோ முறைகளை ஆசிரியர்களாகிய நாம் அன்றாடக் கல்வி
கற்பித்தலில் பயன்படுத்துகிறோம்….உதாரணமாக,
·
விரிவாக்க முறை
·
கதை சொல்லல் முறை
·
விதி வருமுறை
·
விதி விளக்கு முறை
·
செய்து-கற்றல் முறை
·
ஒப்படைப்பு முறை……………………..என சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் எல்லா முறைகளையும் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் பயன்படுத்த வேண்டும்
என்பது இயலாததும், அவசியம் இல்லாத ஒன்றும் ஆகும்.
அதே நேரத்தில் ஏதாவது ஒரு கற்பித்தல் முறையை அவரவர் வகுப்புச் சூழலுக்கு ஏற்றபடி
ஒவ்வொரு கற்பித்தலிலும் ஆசிரியராகிய நாம் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும். அந்தச் சரியான
முறையை, தகுந்த வகுப்பறைச் சூழலுக்குப் பயன்படுத்த ஓர் ஆசிரியர் எடுத்துக் கொள்ள முற்படும்
ஆராய்ச்சிகளோ ஏராளம்! ஏராளம்!ஆனால் மிகச் சரியான போதித்தல் முறையை ஏற்ற சூழலுக்கு தேர்ந்தெடுத்து
செயல்படுத்தும் ஆசிரியர் மிகச் சரியான செயலாராய்ச்சியாளர் ஆகிறார்.
இவ்வாறு கற்பித்தல் களங்களில் கற்பிக்கும்
முறைகளை அறிமுகம் செய்து வெற்றி பெறும் ஆசிரியர்கள் செயல் ஆராய்ச்சியாளரே.ஆசிரியர் -மாணவர் நல்லுறவில் ஆசிரியரின் செயலாராய்ச்சிப்பணி
பிரதானமான கற்றல் பொருள் , பிரம்மிப்பூட்டும் கற்பித்தல் முறைகள் மட்டும் போதுமா ? ஆசிரியரின் ஆராய்ச்சி தொடர்கிறது. உடன் பயணியுங்கள்.கற்றல் அனுபவங்களை பசுமரத்தாணி போல் பதிவிக்க மூளைப்பதிவுகள் மட்டும் போதுவதில்லை.ஆசிரியரின் மனப் பதிவையும் மாணவர்கள் எதிர்பார்க்கிறார்கள் .ஆசிரியர்கள் எப்போதும் இயல்பாக,இறுக்கமில்லாமல்,இனிய முகத்துடன் ,மாணவரின் பிஞ்சு மனதை கொள்ளை கொள்ளும் நோக்குடன் மகிழ்வு சூழலில் மேற்கண்ட பாடப் பொருளை நல்ல சூழல் வகுத்து வழங்கினால் மாணவரின் மூளைப் பதிவுகள் சற்றுக் கூடுதலாகவே பதிவித்துக் கொள்கின்றன . ஆகவே, ஆசிரியர்கள் எந்நாளும்,மாணவர்களை ஆரோக்கியமான நல்லுறவுடன் எதிர்கொண்டு கற்றல் அனுபவங்களை வழங்கும் களத்தில் செயல்பாடுகளை நிகழ்த்தி வெற்றிபெரும் செயலாராய்ச்சியாளராகவேத் திகழ்கின்றனர் என்பது திண்ணம்....
கற்றல் -கற்பித்தல் உபகரணங்களில் ஆசிரியரின் செயலாராய்ச்சிப்பணி
மிகச் செறிவானப் பாடப்பொருள் ,தெளிவான தேர்ந்தெடுத்த கற்பித்தல் முறை,ஆரோக்கியமான ஆசிரிய-மாணவர் நல்லுறவு இவை மட்டுமா?...ஆசிரியர் செயலாராய்ச்சியாளராகப் பணிபுரியும் எஞ்சிய சிலவற்றை இங்கேக் காணலாம்.மாணவர் அறிவுத் திறன் தூண்டப்பட, மாணவர் சிந்தனை வலுப்பெற மேற்கண்ட இவை அனைத்துடன் மாணவரது காட்சிக்குப் புலப்படும் சில உண்மைப் பொருட்களும், மாணவரது கற்பனைக்கு வழிகாட்டும் படக் காட்சிப் பொருட்களும், விளக்கப் படங்களும்,பல்வேறு திரட்டல் பொக்கிஷங்களும்,பட விளக்கப் படங்களும்,கைவினைப்பொருட்களும்,நூலகஅறிவுப்பெட்டகங்களும் ,அறிவியல் ஆராய்ச்சி செய்யும் ஆய்வுக்கூடமும்,புவியியலைப் புரட்டிப் போடும் வரலாற்று வரைபடங்களும் ,வரலாறு படைக்கும் நிகழ்வுகளும் சான்றுகளும் ,இன்றைய சூழலில் internet லிருந்து எடுக்கப்பட்ட செய்திப்படங்களும் ,அரிய செயல்திட்டங்களும் இறுதியாக பாடப் புத்தகமும் அடங்கிய கற்றல்-கற்பித்தலை ...................வலுவூட்டும் உபகரணங்களைக் கையாள்வதிலும் ஆசிரியர்கள் முற்பட்டு ,வெற்றி விளைவு காணும் செயல் ஆராய்ச்சியாளரே எனில் மிகையாகாது.
எந்தப் பாடத்திற்கு எவ்விதமான துணைக்கருவிகளைப் பயன்படுத்தினால் எந்தளவிற்கு கற்றல் அனுபவங்களை மாணவர் அடைகின்றனர் என்பதற்கு,தங்களது சரியான செயல்பாடுகளால் ஆய்வு செய்யும் மிகப் பெரிய பணியை மேற்கொண்டு கற்பித்தல் களங்களில் பரவ விடும் ஆசிரியர்கள் மிகச் சரியான சாதனங்களைத் தேர்ந்தெடுத்து செயலாராய்ச்சியாளராக மிளிர்கின்றனர்.
மாணவர் அடைவு-மதிப்பீட்டில் ஆசிரியரின் செயலாராய்ச்சிப்பணி :
கற்றல் நோக்கங்கள் எதிர்பார்த்த விளைவுகளை மாணவர்களிடம் ஏற்படுத்தியுள்ளதா?என்பதைச் சோதிக்க எத்தனை எத்தனை யுக்திகளை ஆசிரியர் செயல்படுத்தி ஆய்வு செய்கின்றனர்?எழுத்துத்தேர்வு, வாய்மொழித்தேர்வு,திறனறிவுத் தேர்வு என மாணவர் அடைவுகளை சோதிக்கப் பயன்படுத்தும் அடைவுச் சோதனைகள் பல்வேறு....எந்த நிலையில் உள்ள மாணவனும் ,தனது திறனுக்கு ஏற்ப கற்றல் அனுபவங்களைப் பெற்றவனாவான்.எந்த மாணவரும் மற்ற மாணவருக்கு சளைத்தவரில்லை .ஆகையால் ஒவ்வொருவரையும் அவரவர் பெற்றுள்ள கற்றல் அனுபவங்களை வெளிக் கொண்டுவர எத்தனையோ அடைவுச் சோதனைகளைச் செயல்படுத்தி தனது கற்பித்தலின் பங்கையும் உறுதி செய்து மாணவர் கற்றல் அளவையும் சீர்தூக்கிப் பார்க்கும் ஆசிரியர் ஒரு சிறந்த செயல் ஆராய்ச்சியாளரே ......
குறையறிச் சோதனையில் செயலாராய்ச்சி நிகழ்த்தும் ஆசிரியர் :
சிறந்த பாடப்பொருள்,தேர்ந்த கற்பித்தல் முறை ,மிகச் சரியான ஆசிரியர் அணுகுமுறை, அத்துணைக்கும் பொருத்தமான கற்றல் உபகரணங்கள் ,கற்றல் விளைவுகளை மதிப்பீடு செய்யும் முறைகளை வரிசைப்படுத்திய செயல் ஆராய்ச்சியாளரான ஆசிரியர் ....இதோ குறையறி சோதனையில் ஆராய்வு கொள்கிறார்.ஆம்..எந்த மாணவன்/மாணவி ,எதிர்பார்த்த கற்றல் அனுபவங்களைப் பெறவில்லையோ அவரை இனம் கண்டு ,அதற்கானக் காரணத்தை அறிந்து ,பதிலீட்டு முறைகளை நடைமுறையில் பின்பற்றி அந்த மாணவருக்கும் புதியதாகக் கற்றல் அனுபவங்களைத் தரக்கூடிய குறையறிச் சோதனை முறையைப் பயன்படுத்தும் ஆசிரியர் முழுமையான கற்றல் அனுபவங்களை அந்த மாணவர் பெறும்வரை கற்பித்தல் முறைகளை மாற்றி முயன்று தன்னிடம் கற்பித்தலில் குறை இருப்பின் சரி செய்து ,திரும்ப கற்பித்தல் செயல்பாடுகளை வழங்கி ,எத்தனை எத்தனை செயல்களை செய்து ஆய்வில் ஈடுபடும் ஆசிரியர் மிகச் சிறந்த செயல் ஆராய்ச்சியாளர் என்றே கூறலாம்..
மாணவர்-சிறந்தமனிதராக உருவா(க்)கும் பணியில் ஆசிரியரின் செயல் ஆராய்ச்சி :
ஒவ்வொரு மாணவரும் சமூக அமைப்பில் தன் குடும்பத்திற்கு அடுத்தபடியாக அறிமுகமாகும் ஒரு பொது மையம் -பள்ளியே ,ஆகையால் மாணவரது நடத்தையில் குடும்பம் ,பள்ளி இவற்றின் பாதிப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.பள்ளி என்பதில் பெரும்பங்கு வகிப்பவர் ஆசிரியர்களே .ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆசிரியரது குணநலன்கள்,பழகும் விதம்,நடத்தை ,அவரின் கற்பிக்கும் முறை இவைகளில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு,தனக்குள் உள்வாங்கி தன்னில் பிரதிபலிக்கின்றான்.ஆகையால் சமூகத்தில் ஒரு மனிதன் உருவாகிறான் என்றால் அதற்கு ஆசிரியர் பேருதவியாய் இருக்கிறார் என்பதில் எள்ளளவில் ஐயமில்லை .எனவே மேற்கண்ட பண்புநலன்களை ஆரோக்கியமான நல்ல வழியில் ஆசிரியர் பெற்று தானே ஒரு கருவியாக செயல்பட்டு மாணவரை இழைத்து இழைத்து மனிதனாக்கும் சிறந்த செயலாராய்ச்சியில் ஈடுபட்டு ஆய்வு செய்பவராய் இருக்கிறார்.
முடிவுரை ;
எத்தனை மாணவர் இருந்தாலும் ,அவர்களது கற்கும் திறனில் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் அனைவருக்கும் சம நோக்குப் பார்வையுடன் சரியான வழிகளில் அரவணைத்து ,ஒரு சேர எந்த வேறுபாடுகளையும் காட்டாது.கற்பித்தல் செயல்பாடுகளைக் கொடுத்து, மிகச் சிறந்த கற்றல் அனுபவங்களைக் கொண்டுவர ஒவ்வொரு வினாடியும் தங்களை ஆராய்ச்சியாளராக முனையச் செய்து அழியாத சுவடுகளை மாணவரிடம் ஏற்படுத்தும் ஒரு முக்கியப் பொறுப்பாளர் ஆசிரியர்கள்.இவர்கள் தங்களின் அனுபவங்களின் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக "செயல் ஆராச்சி"களில் ஈடுபட்டு தங்களைப் பொலிவூட்டிக் கொள்கின்றனர்.
பணி அனுபவம் கூடக் கூட செயல் ஆராய்ச்சியின் ஆழமும் ,தெளிவும் ஓங்கி உயர்கிறது.ஆசிரியரது இந்த ஈடுபாட்டால் மாணவன் பட்டைத் தீட்டப்படுகிறான்.இந்தச் சுழற்சி விடாமல் தொடர்கிறது.ஆகையால் ஆசிரியப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும்
தாங்கள் அறிந்தோ,அறியாமலோ ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு செயலாராய்ச்சியாளராகப் பணியாற்றுகிறார்கள் என்பது முழுக்க முழுக்க உண்மை.
ஆகவே ஆசிரியர் வகுப்பைப் பராமரிப்பவராக மட்டுமின்றி கற்றல்கள ஆய்வாளராக ,மதிபீட்டாளராக ,உடனிருந்து கற்பவராக ,கற்றல் செயல்பாடுகளை அவ்வப்போதே திருத்தம் செய்பவராக ,புதுமைகள் பல புனைபவராக செயல் ஆராய்ச்சியாளராகத் தன்னைத் திறன் வளப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை...சிறிதும் ....!!!!!!!!!!!!!!!
வாழ்க அவர்களது பணி !

வளர்க செயலாராய்ச்சிகளின் கனி !
வாழ்க பாரதம்!வளர்க ஆசிரியப்பணி !
`
No comments:
Post a Comment