Tuesday, 25 March 2014

                                                 


                                          மார்ச்  23-உலக  காலநிலை  தினம்

                        "காலநிலை "-இந்த ஒரு  சொல்லில் நம்  வாழ்வின்  முக்கிய அம்சங்கள் அனைத்தும் உள்ளடங்கும் ..இரவும் பகலும் ,கோடையும்  மழையும் இதனைப் பொறுத்தே ..பயிர் ,விளைச்சல் ,அறுவடை ,உணவு ,நீர்,காற்று வெப்பம்,பனி ,குளிர் என எத்தனையோ தேவைகளுக்கு இந்த "காலநிலை "யே  ஆதாரம் .
                          நொடிப் பொழுதில் நமது பயணங்கள் மாறும்;காலநிலை -வானிலை மாறுபாட்டால்... உலக நாடுகளின் திட்டங்களிலும் திடீர் மாறுபாடு ஏற்படலாம் ;புயல் வந்தால் கப்பல் பயணம் திசை மாறும் ;விமான வழித்தடம் மாறும்;அடைமழை என்றால் அன்றாடத் தேவைகளின் விலைவாசி கூடும்; சாலைகளில் நீர்ப் பெருக்கு வரும்;சாலை வழிப் போக்குவரத்து  ஸ்தம்பிக்கும்;  தண்டவாளங்கள்  பழுதாகும் ;ரயில் போக்குவரத்திலும் மாற்றம் ஏற்படும் ;பள்ளிகளுக்கு  விடுமுறை வரும்;இப்படி மாறுதல்கள் தொடரும்.
                               
                          புவி சுழற்சியோடு தொடர்புடைய காலநிலை மனிதரின் வாழ்க்கையில்  எல்லா நிலைகளிலும் தொடர்புடையதே;புவியியல் மாற்றங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் பின்னாட்களில் வரலாறுகள் தோன்றக் காரணமாகின்றன;நேரமும் தூரமும் காலநிலை  மாற்றத்தில் பங்காற்றுகின்றன;அங்கே கணிதமும் சேர்ந்து விடுகிறது;
                        .இப்படி வரலாறு -கணிதம்-அறிவியல் இவற்றோடு தொடர்புடைய புவியியல் காரணி தான் காலநிலை .ஓரிடத்தின் காலநிலையைப் பொறுத்தே  
அங்கு  வாழும் மக்களின் வாழ்க்கை முறை மாறுடுகிறது.கண்டத்திற்குக் கண்டம் வாழும் உயரினங்கள் மாறுபடுகின்றன...வளரும் மரங்கள்  என எல்லாம் காலநிலையைச் சார்ந்தே.

                       காலநிலையைப் பற்றி முன்னறிவிப்பு செய்யும் அறிவியல் படிப்பு தான் meteorology .ஐக்கிய நாடுகள் வானிலை-காலநிலையின் முக்கியத்துவத்தை  உணரும் பொருட்டு maarch 23 அன்று ---உலக காலநிலை-வானிலை தினம்  (world meteorology day )என  அறிவித்துள்ளது.ஆகவே தான் இன்று உலக காலநிலை தினம்.

Saturday, 22 March 2014

தண்ணீர் தினம்



                                           உலக தண்ணீர் தினம்  மார்ச் 22



                          தண்ணீரின் மகத்துவம் நமக்கு நன்றாகத் தெரியும். வாழ்வின் ஆதாரமே தண்ணீர்தான். இருப்பினும் எந்த சிந்தனையும் இன்றி நாம் நீரை வீணாக்கி வருகிறோம்.
                          நமது நீர் வளம் குறைந்து கொண்டே வருவதையும்  நாம் நன்கு அறிவோம்.ஆனாலும் அதை உணர மறுக்கிறோம்.நீர் வளம் தீர்வதற்கு முன் முழுமையும்  பயன்படுத்தி விட வேண்டுமென்ற வேட்கையோடு வேகமாய் நீரைத் தீர்த்து வருகிறோம் .இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், உலகம் வெகு விரைவில் தண்ணீர் தாகத்திற்கு உள்ளாகும்.
                          நீரை சரியான வழியில் உபயோகித்து ,நீர் வளங்களைப் பாதுகாக்க நாம் செயல்பட வேண்டுவது தற்சமயம் அவசரத் தேவையாகிவிட்டது
                         ஐக்கிய  நாடுகள் டிசம்பர் 22 ,1992 ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.அதன் விளைவே மார்ச் 22 ஒவ்வொரு வருடமும் உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டது .முதல் உலக தண்ணீர் தினம் 1993 இல் கடைபிடிக்கப்பட்டது.

  தண்ணீர் தண்ணீர்  தண்ணீர் ....
                                       நம் வருங்கால சந்ததிக்கு சிறிதாவது விட்டுச் செல்வோம்.

Tuesday, 4 March 2014

கற்றல்

                                 



                                                               கற்றல்

                                 
                            கற்றல்   மிக  இனிமை !
                             ...
                           கற்றல்   தேடலைத் தரும்  !
                           கற்றலுக்கான தேடல் சுவாரஸ்யம் !
                           ஆம் ! கற்றல் மிக  இனிமை ....
                            தேடுவோம் ..........