Monday, 7 April 2014

போட்டோ - சான்

            டோடோ -சான் (ஜன்னலில் ஒரு சிறுமி)


                                      கல்விப் பயணத்தில் -நான் ( ம் )
                                      கற்றுக்கொள்ள  வேண்டிய 
                                      கரைகள்  எப்போதும் 
                                      கண் பார்வைக்குள்  அடங்குவதில்லை !
                                      சிறு புள்ளியாய் ...... இந்த
                                     சின்னக் கதைக்குள் ..........
                                      ஜன்னலில் ஒரு சிறுமி !
 


                                                                     ஜப்பான்  நாட்டுக்  கதை, டோடோ -சான் ..
                              ஆசிரியர்  டெட்சுகொ  குரோயாநாகி . ஆசிரியர்கள் கட்டயாம்
                             படிக்க வேண்டியப்  புத்தகம். 
                             தமிழில் அ .வள்ளி நாயகம் ,சொ.பிரபாகாரன் மொழி                                                         பெயர்த்துள்ளனர் .

Wednesday, 2 April 2014

அகில உலக விளையாட்டு மற்றும் அமைதி நாள்

அகில உலக விளையாட்டு மற்றும் அமைதி நாள் 

                                           ஏப்ரல் -6

                                    ஐ .நா  சபை ஏப்ரல் 6 ஆம் நாளை அகில உலக விளையாட்டு மேம்பாடு மற்றும் அமைதிக்கான நாளாக அறிவித்துள்ளது.

                                   மனிதன்  தோன்றிய காலத்திலிறிந்தே விளையாட்டு என்பது அவனிடமிருந்து  பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. விளையாட்டு எப்போதும் எல்லா மனிதனுக்கும் பொதுவானதாகவே உள்ளது.எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் ஈடுபடுவோருக்கு உள்ளக் கிளர்ச்சியும் புத்துணர்ச்சியும்  பிறக்கும்.ஈடுபாடு,ஆர்வம் மற்றும் கூர்மையான கவனம் அனைத்தும் ஒருங்கிணைந்து உடலளவிலும் மனதளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் .
                                  சிறு குழந்தைகள் மட்டுமல்ல ,வளர்ந்த  மனிதர்களும் விளையாட்டில் ஈடுபடும்போது தன்னை மறந்து விடுவர் அல்லவா !!! பிறர் விளையாடும்போது அதை கண்டுகளிக்கும்  பார்வையாளர்களாக இருப்போரிடமும் அந்த உற்சாகம் தொற்றிக்கொள்வதை  நாம் உணரலாம் .
                                  விளையாட்டுகளில் ஈடுபடுவோரது உடல் உள் உறுப்புகளின் 
செயல்பாடு தடையில்லாமலும் ,ரத்த ஓட்டம் சீராகவும் அமைந்து,உடல்-மனம்  இரண்டும் ஆரோகியமுள்ளதாக மாறும்.
                                  மொழி,இனம்,பண்பாடு,இருப்பிடம் போன்ற எல்லா நிலைகளிலும் வேறுபட்ட மனிதர்களை  ஒன்றிணைத்து ,அவர்களிடம் ஒற்றுமையை  நிலைநாட்டுகிறது விளையாட்டு என்றால் மிகையாகாது ....
                                   மேலும்  ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையையும்  வளர்க்கிறது ;தன்னம்பிக்கை,  தன்மதிப்பு போன்றவற்றையும் உயர்த்துகிறது :
இதுபோல் இன்னும் இன்னும் எத்தனையோ நன்மையைத் தரும் விளையாட்டின் முக்கியத்துவத்தை உலக மக்கள் அனைவருக்கும் உணர்த்தும் பொருட்டும் ,விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் ஏப்ரல்-6 ஆம் நாளை உலக விளையாட்டு மேம்பாடு மற்றும் அமைதிக்கான தினமாக  (INTERNATIONAL  DAY  OF SPORT FOR DEVELOPMENT  AND PEACE  ) அறிவித்துள்ளது ...