உலக தண்ணீர் தினம் மார்ச் 22
தண்ணீரின் மகத்துவம் நமக்கு நன்றாகத் தெரியும். வாழ்வின் ஆதாரமே தண்ணீர்தான். இருப்பினும் எந்த சிந்தனையும் இன்றி நாம் நீரை வீணாக்கி வருகிறோம்.
நமது நீர் வளம் குறைந்து கொண்டே வருவதையும் நாம் நன்கு அறிவோம்.ஆனாலும் அதை உணர மறுக்கிறோம்.நீர் வளம் தீர்வதற்கு முன் முழுமையும் பயன்படுத்தி விட வேண்டுமென்ற வேட்கையோடு வேகமாய் நீரைத் தீர்த்து வருகிறோம் .இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், உலகம் வெகு விரைவில் தண்ணீர் தாகத்திற்கு உள்ளாகும்.
நீரை சரியான வழியில் உபயோகித்து ,நீர் வளங்களைப் பாதுகாக்க நாம் செயல்பட வேண்டுவது தற்சமயம் அவசரத் தேவையாகிவிட்டது
ஐக்கிய நாடுகள் டிசம்பர் 22 ,1992 ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.அதன் விளைவே மார்ச் 22 ஒவ்வொரு வருடமும் உலக தண்ணீர் தினமாக கொண்டாடப்பட்டது .முதல் உலக தண்ணீர் தினம் 1993 இல் கடைபிடிக்கப்பட்டது.
தண்ணீர் தண்ணீர் தண்ணீர் ....
நம் வருங்கால சந்ததிக்கு சிறிதாவது விட்டுச் செல்வோம்.
tell us how to save water.also how to improve water resources
ReplyDeletehow to get back lost ponds